
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் வேலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல தரப்பினரும் பள்ளியில் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாளை தமிழகம் முழுவதும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் 12000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என்ற பள்ளிக் கல்வித் துறை அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளது. நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அது மாணவர்களின் படிப்புக்கு பெரும் சிக்கலாக மாறும் என கூறப்படுகிறது.