இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) பற்றாக்குறையைச் சமாளிக்க அர்ஜென்டினா நாடு இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 22,000 டன் எல்.பி.ஜி-யை இந்தியாவுக்கு வழங்கிய அர்ஜென்டினா, தற்போது தனது விநியோகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 50,000 டன் எல்.பி.ஜி-யை அர்ஜென்டினா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு நீங்கும் என்றும், பொதுமக்களுக்குத் தடையின்றி சிலிண்டர்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
