மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் இருசக்கர வாகனத்தைக் கணவனே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாகக் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், கோபித்துக் கொண்டு மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பலமுறை அழைத்தும் மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள மனைவியின் ஸ்கூட்டரை நடுரோட்டில் வைத்துப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.
பட்டப்பகலில் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும் கணவன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
