ஹரியானாவில் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வூதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 31.40 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்து பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம், லாட்டனி சமூக உதவி திட்டம், ஹரியானா குள்ள நபர்கள் உதவித்தொகை திட்டம், அயோன்ஸ் திட்டம், விதவைகள், திருமணம் ஆகாத நபர்களுக்கு நிதி உதவி, வயது முதிர்ந்தவர்களுக்கான நிதி உதவி, அரிதான நோயால் தாக்கப்பட்டவர்கள் போன்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 2750 ரூபாயில் இருந்து ரூ.3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 2400ரூபாய், ஆதரவற்ற குழந்தைகளுக்கு 2100ரூபாய், காஷ்மீரி குடிபெயர்ந்து ஒரு திட்டத்திற்கு 1500 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.