உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ் சவுத்ரி மற்றும் சவுரப் ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்குள் கடும் வாக்குவாதம் வெடித்தது. விஷன் 2047 திட்டம் தொடர்பாக விவாதம் நடைபெறும் போது இருவரும் ஒருவரை ஒருவர் குறிவைத்து கடும் வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் அதிகரித்த நிலையில், சவுத்ரி திடீரென ஸ்ரீவஸ்தவாவை நோக்கி விரைந்தார். அந்த சமயம் அங்கு இருந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தியதால் பெரிய சண்டை தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் உள்ள குழப்பம் மற்றும் அதிகாரப்போராட்டத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் பாஜக சார்பில் யார் பேச வேண்டும் என்ற சர்ச்சையே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இருவரும் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

“>

 

அதேசமயம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிற தலைவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.