சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், மனிதநேயத்திற்கும் தைரியத்திற்கும் சான்றாக சில வீடியோக்கள் மட்டுமே அமைகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

அதில், பெருக்கெடுத்து ஓடும் சீற்றமிக்க ஆற்று வெள்ளத்தில் ஒரு பிரம்மாண்டமான நச்சுப் பாம்பு சிக்கித் தவிக்கிறது. அதைப் பார்த்த சில இளைஞர்கள், சிறிதும் பயமின்றி மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு, அந்த ஆபத்தான பாம்பை வெள்ளத்திலிருந்து பத்திரமாக இழுத்து வெளியே எடுத்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

“>

இந்த நெஞ்சை உலுக்கும் மீட்பு வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட உடனே, ஆயிரக்கணக்கானோரின் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்பைக் கண்டால் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், இந்த இளைஞர்கள் காட்டிய அதீத தைரியத்தையும், வனவிலங்கு மீதான மனிதநேயத்தையும் நெட்டிசன்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ “விலங்குகளின் உயிரையும் காக்க நினைக்கும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்” என்றும், “மனிதநேயத்திற்கும் இயற்கையின் மீதான பொறுப்பிற்கும் இதுவே சிறந்த உதாரணம்” என்றும் பயனர்கள் கமெண்ட் செய்து அந்த இளைஞர்களுக்கு தங்களது சல்யூட்டைத் தெரிவித்து வருகின்றனர்.