உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்சருமான நிஷா சவுகான் என்பவர் அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவத்திற்கு முழு முதற் சாட்சியாக இருந்துள்ளவர் நிஷா சவுகானின் மகன் தேவ் சவுகான் ஆவார். சம்பவத்தன்று தனது தாயைக் காப்பாற்றுவதற்காக அந்தச் சிறுவன் கடுமையாகப் போராடியுள்ளான்.

மேலும் அந்தக் கோரமான நாளில், தந்தை தனது தாயைத் தாக்கத் தொடங்கியபோது, சிறுவன் தேவ் சவுகான் இடையில் புகுந்து தாயைக் காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயன்றுள்ளான். இந்த முயற்சியில் அவனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், அவனால் தனது தாயின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது. “நான் அம்மாவைக் காப்பாற்றிக் கொண்டே இருந்தேன், ஆனால் அப்பா அவங்களை…” என்று அந்தச் சிறுவன் கண்ணீருடன் கூறிய வார்த்தைகள், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் பொதுமக்களையும் அப்படியே உலுக்கியெடுத்துள்ளது.