பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகை கங்கனா மீண்டும் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை பி வாசு இயக்குகிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ராணாவத் சந்திரமுகி 2 படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சந்திரமுகி 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக கலா மாஸ்டர்ஜியுடன் இணைந்து ரிகர்சலை ஆரம்பித்துள்ளோம். கோல்டன் குளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ள பாடல். சாதனையாளர் பி. வாசு இயக்கத்தில் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் சந்திரமுகி 2 படத்திற்கு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு இசை அமைத்த கீரவாணி இசையமைப்பது தற்போது தெரியவந்துள்ளது.