விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பத்து போட்டியாளர்கள் அதில் ஒன்பது போட்டியாளர்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒரு போட்டியாளர் சர்ப்ரைஸ் ஆக வைத்திருந்த நிலையில் அவர் யார் என்பது குறித்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைன் கோபி தான் அந்த பத்தாவது போட்டியாளர்.

மேடை நாடக கலைஞர் ஆன இவர் மெட்ராஸ் மற்றும் கதகளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.