விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிகவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், தேர்தல் கூட்டணிக் கணக்குகள் குறித்துப் பேசுகையில் ஒரு புதிய அரசியல் பாதையை முன்மொழிந்துள்ளார்.

“இத்தனை காலம் நாம்  சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம்; அந்தப் பாதையிலேயே பயணித்து நமது பலத்தை நிரூபித்திருக்கிறோம். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் வெற்றி பெற வேண்டுமானால், இனி நாம் சாணக்கியத்தனமாக (இராஜதந்திரமாக) காய்களை நகர்த்த வேண்டும்” என்று அவர் பேசினார். 2026 தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மெகா கூட்டணியாக அமையும் என்றும், எந்த ஒரு கட்சியும் தேமுதிகவின் ஆதரவின்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

“>

 

விஜயகாந்தின் பாணியில் வீரமாகவும், அதேசமயம் காலத்திற்கு ஏற்ப விவேகமாகவும் செயல்பட வேண்டும் என்ற அவரது இந்த ‘சாணக்கிய’ அணுகுமுறை, தேமுதிக தொண்டர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.