அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலப் பகுதியில், பாம்பு பிடிப்பவர் ஒருவர் அருகருகே இருந்த இரண்டு பிரம்மாண்டமான பர்மிஸ் மலைப்பாம்பு கூடுகளைக் கண்டுபிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த இரண்டு கூடுகளிலும் சேர்த்து மொத்தம் 120 முட்டைகள் இருந்தன. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு இனமாகப் பெருகிவரும் இந்த மலைப்பாம்புகளின் எண்ணிக்கை தற்போது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

“>

 

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முட்டைகள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.