பெருநாட்டில் அத்தியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அயசியோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐக்ரா மற்றும் பவுசா ஆகிய இரு நகரங்களை மலைப்பாதை ஒன்று இணைக்கின்றது. இந்த மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிய பாறைகள் சரிந்து மலைப்பாதையில் விழுந்துள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை வெகு தூரத்திலேயே நிறுத்திக் கொண்டனர்.

அந்த சமயத்தில் மலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து டன் கணக்கான பாறை மற்றும் மணல்களுடன் சாலையில் விழுந்துள்ளது. முன்னதாக வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் மலைப்பாதை முழுவதும் பாறைகளால் மூடப்பட்டதால் சாலையின் இரு பக்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை அடுத்து சாலையில் விழுந்த பாறைகளையும் மணல்களையும் அகற்றும் பணியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையிலும் அந்நாட்டின் பேரிடர் மேலான் படையினர் ஈடுபட்டுள்ளனர்.