ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் பேச்சு பொருளாகியுள்ளது. ஐஸ் கட்டி மழை, விண்கல்மழை, பனிமழை என பல மழைகள் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.

வடக்கு ஆஸ்திரேலியாவில் மீன் மழை பொழிந்தது என்றும் தரையில் விழுந்த மீன்கள் உயிருடன் இருந்தது எனவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். இதே பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு , 2004 ஆம் ஆண்டு, 1974 ஆம் ஆண்டு இதுபோன்று மீன் மழை பொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.