தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். என் நிலையில் ரோபோ சங்கர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுகிறார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரின் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தில் அவரின் மனைவியும் மெலிந்த நிலையில் காணப்படுகிறார்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று கூறியுள்ள அவரின் மகள், சித்தப்பா படங்களில் மிகவும் பிசியாக இருந்தார். படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கடந்த ஒரு வருடமாக உடல் எடை குறைப்பில் அதிக கவனம் செலுத்தினார். இதனால் அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். இதுதான் எடை இழப்புக்கு காரணம் வேறு எதுவும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.