வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் இபிஎஸ், பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்துக்கு புறம்பாக  தேர்தலை அறிவிப்பது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என கூறிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியும் இபிஎஸ் அடங்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.