உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

மிரளும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை முடித்த பிறகு, நதியில் குளிப்பதற்காகச் சென்ற தீபக் சர்மாவை, அங்கிருந்த முதலை ஒன்று திடீரென தாக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி அவர் நதிக்குள் இறங்கிய நிலையில், சில நொடிகளில் முதலை அவரை இழுத்துச் சென்றது அங்கிருந்தவர்களை உறைந்து போகச் செய்தது.

“>

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினரும், உள்ளூர் மக்களும் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இருப்பினும், பல மணிநேரம் கடந்தும் அவரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து, லக்னோவிலிருந்து வரவழைக்கப்பட்ட மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இறுதிச் சடங்கிற்குச் சென்ற இடத்தில் நடந்த இந்த எதிர்பாராத உயிரிழப்பு, அந்த இளைஞரின் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நதி ஓரங்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.