இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட நில அதிர்வு மழுகு மாகாணம் முழுவதும் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் இதுவரை சுனாமியை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.