உக்ரைன் நாட்டின் மீது சென்ற வருடம் பிப்,.24-ஆம் தேதியன்று தன் தாக்குதலை துவங்கிய ரஷ்யாவானது, ஓராண்டாக சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் துவங்கி ஓராண்டாகியும் தொடரும் தாக்குதல்களின் பாதிப்பு குறித்து ஐநா தீர்மானத்தை வெளியிட்டது. உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்காக ரஷ்யா உடனே சண்டை நிறுத்தம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என ஐநாவின் தீர்மானம் கோருகிறது.

உக்ரைனில் நீடித்த அமைதி குறித்த ஐநாவின் இந்த தீர்மானத்திலிருந்து இந்தியா விலகி நின்றது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை இந்தியா மீண்டுமாக புறக்கணித்துள்ளது. இத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியாவின் அண்டை நாடான சீனாவும் ஒதுங்கி நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.