ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா இடையே நிலவிய கடும் மோதல் போக்கு, அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்டியா களமிறங்கியபோது குருணால் பாண்டியா பந்துவீச வந்தார். பொதுவாக ஒருவருக்கொருவர் நகைச்சுவையாகப் பழகும் இவர்கள், இந்தப் போட்டியில் மிகவும் சீரியஸாகக் காணப்பட்டனர். குருணால் வீசிய ஒரு வேகமான பவுன்சருக்குப் பிறகு, இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Krunal Pandya’s reaction after Hardik Pandya got out 😭 pic.twitter.com/g7pBXF68Xi
— chhavi💫 (@abeyarrrrrr) April 12, 2026
குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை குருணால் வீழ்த்தியபோது, அவர் காட்டிய அதீத ஆக்ரோஷமான கொண்டாட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது தம்பியின் விக்கெட்டை வீழ்த்தியதற்காக அவர் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது, இருவருக்கும் இடையிலான உறவு ‘தொழில்முறைப் போட்டியாக’ மாறிவிட்டதைக் காட்டுவதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாண்டியா சகோதரர்களிடையே மோதல் இருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன. அதாவது டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தை நாடே கொண்டாடிய நிலையில், குருணால் மற்றும் அவரது மனைவி பன்குரி சர்மா அது குறித்து சமூக வலைதளங்களில் எந்தப் பதிவும் இடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் தனது சகோதரரின் பிறந்தநாளுக்கு ஹர்திக் வாழ்த்து தெரிவிக்காததும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தது. ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்திற்குப் பிறகு, குருணால் குடும்பத்தினர் நடாஷாவுடன் நெருக்கமாக இருப்பதும், ஹர்திக் தனது தோழி மஹேகா சர்மாவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்த்துகின்றன. மைதானத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த ‘குளிர் யுத்தம்’ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
