
இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டப்பேரவையில் கவனயிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, பிப்ரவரி 14. 1998 அன்று கோயமுத்தூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலர் பலியாகி உள்ளார்கள். பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் 20 பேர் பல்வேறு சமூ குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, சிறையில் உள்ளார்கள். ஆக மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 15. 11. 2021 அன்று போடப்பட்ட அரசாணையால் 15. 11. 2021 இவர்கள் முன் விடுதலையாவது தடைப்பட்டது என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கடிதத்தில் தெரிவித்து இருக்கின்றனர். எங்களிடத்திலே கோரிக்கை வைக்கின்ற போது, இவர்களில் ஒரு சிலர் உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது ஆயுள் தண்டனைகள் சிறையில் இருக்கும் 36 இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற 36 இஸ்லாமிய சிறைவாசிகள் சிறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வயது மூப்பு, உடல் நலக்குறைவு மற்றும் குடும்பத்தின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என பேசினார். இந்த வீடியோவை தற்போது சமூக ஊடகமான ட்விட்டர் X-இல் பகிர்ந்து வரும் பாஜகவினர் #கோவை_மன்னிக்காது என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கா விடுதலை! !
இதற்க்கு அதிமுக ஆதரவு! !
திடீர் பழனிசாமியின் திடீர் பாசம்! !
வாக்கு அரசியல் , கேவலத்தின் உச்சம்! !@EPSTamilNadu
#கோவை_மன்னிக்காது pic.twitter.com/9LClBdfvhl— Hari Prabhakaran (@Hariindic) October 10, 2023
சனாதனம் பற்றி பேசியபோது திறக்காத வாய் 1998ம் குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மட்டும் வாய் திறக்குதோ ?
எல்லாம் கேவல வாக்கு அரசியலுக்கு ? 💦#கோவை_மன்னிக்காது pic.twitter.com/2hyIaJ6yEj
— Karthi (Modi Ka Parivar) (@SaffronSurge3) October 10, 2023
டயர்பாடி அவர்களே இதற்கு பதில் 2024ம் ஆண்டு தேர்தலில் கொடுக்கப்படும்.
நன்றி! 🙏🏼#கோவை_மன்னிக்காது pic.twitter.com/wXs1lgN5OX
— Karthi (Modi Ka Parivar) (@SaffronSurge3) October 10, 2023