சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். சில பேருந்து மற்றும் ஆட்டோக்களை வழியில் நிறுத்துவது தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. இதனால் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் முக்கிய உத்தரவு ஒன்று  வெளியாகி உள்ளது. அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை  ஏற்படுத்தும் விதமாக பேருந்து மற்றும் ஆட்டோக்களை நிறுத்துவதால் திடீரென்று வாகனங்களை சாலையோரம் திருப்பும் போது பின்னால் வரும் வாகனங்கள் இடித்து விபத்து நேரிடும் அபாயம் வருகிறது.

எனவே பேருந்து ஆட்டோக்களை உரிய இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தி நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அசோக் நகர், மீனம்பாக்கம் போன்ற எண்பது இடங்களில் சாலைகளில் மஞ்சள் கோடுகள் இட்டு அங்கு பேருந்து நிறுத்தும் இடமாக அறிவிக்கப்பட்டது, இந்த அறிவிப்பை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.