
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையும் தொழில் கட்டமைப்பையும் மேம்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் சமூக நீதியுடன் கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை நடக்காத பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில் வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சியையும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அமைச்சர் என்னிடம் கூறிய போது, இந்த நிகழ்ச்சியை நான் கோவையில் நடத்த அவரைக் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால் கோவை தான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது. கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர். எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களும், பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா”-வில் ஆற்றிய உரை.#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@thamoanbarasan @mp_saminathan pic.twitter.com/zeoMgxRxds
— TN DIPR (@TNDIPRNEWS) August 19, 2023