வலை உலர்த்துகின்ற இடம், அங்கு இருக்க கூடிய பவளப்பாறைகள்,  ஆமைகள் வரக்கூடிய இடங்கள் அல்லது கடல் உயிரினங்கள்,  கடற்கரை ஓரத்திலே பயன்படுத்துகின்ற இடம் என  இதையெல்லாம் சேர்த்து,  உருவாக்கக்கூடிய பகுதி தான் கடற்கரை  பகுதி. நெய்தல் இடம் என்று சொல்லக்கூடிய இடம் இதான். இந்த நெய்தல் இடத்தில் இதெல்லாம் இருக்கின்றது என்பதை அரசு ஆவணப்படுத்துகின்றது.

இந்த ஆவண படுத்துகின்ற திட்டத்திலே…  அவர்கள் மேற்கண்ட நடவடிக்கையில்….  தமிழ்நாட்டினுடைய கிட்டத்தட்ட 500க்கும் மீனவர் கிராமங்கள் காணவில்லை.மீனவ கிராமங்கள் காணாமல் போய் இருக்கிறது. எதிலே  ஒன்றிய அரசாங்கம் உருவாக்கிய அந்த வரைபடத் திட்டத்தில் 500க்கும் அதிகமான கிராமங்கள் காணாமல் போயிருக்கிறது என்பதை நாங்கள் இப்போது கேள்வியாக ஒன்றிய அரசின் முன்னால் வைக்க விரும்புகின்றோம்.

ஒரு கிராமமே காணாமல் போய் இருக்கு என்றால் ? எந்த மாதிரியான மேப்பிங் பண்ணி இருக்கீங்க. அப்படிங்கறது தான் எங்களுடைய கேள்வி.  நாங்கள் மீனவர்களுக்கு ஆதரவாகவும்,  இதற்காக போராடுகின்ற மீனவ சங்கங்களுக்கு துணையாகவும் இப்பொழுது பத்திரிகையாளர்களை  சந்திக்கின்றோம். இதே போன்ற கடந்த காலத்திலும் இதே போல மேப்பிங் பண்ணும் போதும்,  இதே போல மீனவ  கிராமங்கள் காணாமல் போனது.  எங்களுடைய குற்றச்சாட்டு என்னவென்றால்?  மிக முக்கியமான மீனவ கிராமங்களே  இந்த மேப்பில் இல்லாம இருக்குது.

குறிப்பா சொல்லப்போனால் ? மகாபலிபுரம் … மாமல்லபுரம் மீனவ பகுதியே இந்த மேப்ல இல்ல. பூம்புகார் இல்ல. தமிழ்நாட்டினுடைய மீனவ கிராமத்தின் கடைக்கோடி கிராமமாக இருக்கக்கூடிய நீரோழி, தூத்தூர்., இறைமண் துறைமுகம் போன்ற பகுதியில் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி – தூத்துக்குடி செல்லப்படுகின்ற கடற்கரை ஓர மாவட்டங்களில் இருக்கக்கூடிய மிக முக்கியமான கிராமங்கள், மீனவ கிராமங்கள் எதுவுமே குறிப்பிடப்படாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல,  புதுச்சேரிக்கும் இதே தான் நிலைமை.  புதுச்சேரியிலும் இதே போன்ற ஒரு நிலைமை இப்போது இருக்கிறது.  அங்கே பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.

அப்போ இத்தனை கிராமங்கள் ஏன் விடுபட்டு இருக்கின்றன ? இது போற போக்க நடக்கல…. மகாபலிபுரத்தில் மீனவர்களே  இல்லையா என்ன ? நீங்க கன்னியாகுமரி பகுதியில் இருக்கக்கூடிய கிராமங்கள் –  கடற்கரை கிராமங்கள்  முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்கள், ஒக்கி  புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்கள், அந்த கிராமங்களும் அந்த மேப்பிங்கில்  இல்ல…  வரைபடத்தில் இல்லை என தெரிவித்தார்.