தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க செல்லும் பெண்கள் ஆதார், ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி புத்தகம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஏற்கனவே சிறப்பு முகாம் நடத்தப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இறுதி வாய்ப்பாக இன்றும் நாளையும் முகாம்கள் நடைபெறும் நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.