கோதார்நாத் கோவிலுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய காதலனை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் அல்லது பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு முன்னால் பலரும் மோதிரத்துடன் முழங்காலில் இருந்து காதலை தெரிவிப்பது வழக்கம் தான். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் தன்னுடைய துணைக்கு மோதிரம் கொடுக்கிறார். அதனைப் பார்த்த பலரும் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அழகான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.