பிரதான் மந்திரி சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக பாதிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றம் வந்துள்ளது. அதாவது இந்த திட்டத்தின் பயன்பெறும் பயனாளிகளின் நிலையை பார்க்கும் முறையானது முற்றிலும் மாறிவிட்டது.

அது தவிர பி எம் கிஸான் என்ற செல்போன் செயலியும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் இந்த திட்டத்தின் பயனாளியின் நிலையை பார்க்க விரும்பினால் அதற்கு உங்களுடைய பதிவு எண் தேவைப்படும். otp மற்றும் கைரேகை பதிவு தேவை கிடையாது. இந்த திட்டத்தில் பல்வேறு மோசடிகளை தடுக்கும் நோக்க நோக்கத்தினால் இ-கேஒய்சி நிறைவு செய்யும் நோக்கத்தோடு வேளாண்மைச்சகம் செல்போன் செயலி  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலமாக இ கேஒய்சி சரிபார்க்க முடிக்க முடியும். உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் மற்றும் கைரேகை தேவை கிடையாது.