இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி கணக்குகளில் பல வகைகள் உள்ளது. அதாவது சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்கு ஆகியவற்றை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த கணக்குகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதிகமாக பயன்படுத்தப்படும் சேமிப்பு கணக்கில் அளவுக்கு அதிகமாக பணத்தை சேமிக்க முடியாது. சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படும் படம் வருமான வரி வரம்பிற்குள் வந்தால் அது குறித்த தகவல்களை வழங்க வேண்டும்.

வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம் வருமான வரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு வங்கியும் ஒரு நிதியாண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான ரொக்க டெபாசிட்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் கட்டாயமாகியுள்ளது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வைப்புத் தொகை, பரஸ்பர நிதிகள், பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதற்கும் காசோலைகள் மற்றும் அன்னிய செலவாணி போன்ற வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கும் அதே வரம்பு 10 லட்சம் ரூபாய் பொருந்தும். எனவே சேமிப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் போது இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.