டெல்லி ஸ்வரூப் நகரில் உள்ள அமிர்த் விஹார் குடியிருப்பு பகுதியில், வியாழக்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த மோதல், இறுதியில் வீட்டின் இரண்டாவது மாடி கொழுந்துவிட்டு எரியும் நிலைக்குத் தள்ளியது. இதில் வீட்டின் பால்கனியில் சிக்கிக்கொண்ட நபர், தீயின் வெப்பம் தாளாமல் அங்கிருந்த மின்சார ஒயர்கள் மீது ஏறி, மிகுந்த ஆபத்துடன் நடந்து தப்பிக்க முயன்ற காட்சி காண்போரை உறைய வைத்தது.
🚨Shocking Delhi Fire Horror: Man Walks on Live Wires to Escape Flames!
In Swaroop Nagar, Amrit Vihar Delhi, a massive fire broke out due to a family dispute.
Trapped on the burning floor, a man stepped onto electricity wires and carefully walked across them as flames… pic.twitter.com/nWLlJpdcTo
— Ramesh Tiwari (@rameshofficial0) April 15, 2026
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த நபரை சாமர்த்தியமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தத்ரூப மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
