தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஏராளம். அதன்படி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை ரேணுகா மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் பரத்துடன் பிப்ரவரி 14, ஜெயம் ரவியுடன் தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ் குமார் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவை விட்டு விலகி கலிபோர்னியாவில் செட்டிலானார். தற்போது இவர் நடன பள்ளி ஒன்றையும் நடத்திவரும் நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.