லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு நயன்தாரா முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சசிகாந்த் இயக்கத்தில் சித்தார்த், மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் திரைப்படத்தை நடித்து இருக்கிறார். இந்த படம் தன்னை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி உள்ளார். மேலும் யோகி பாபுவோடு மண்ணாகட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா, நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள சாலையில் நண்பர்கள் சிலருடன் அவுட்டிங் சென்ற அவர், தனக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிட்டார். இது தொடர்பாக தளத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வரும் நிலையில், விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக சென்றீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.