தெலுங்கானா மாநிலத்தில் ஜல்லபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணய்யர், தனது மனைவி மாதம்மாவின் மறைவுக்குப் பின்னர் இளைய மகனின் இல்லத்தில் வசித்து வந்தார். அவருக்காக சமையல் செய்த மருமகள், பழைய சாதத்தை பரிமாறினார். அது குளிர்ச்சியாக இருந்ததால் கிருஷ்ணய்யர் சூடான சாப்பாடு கேட்டார். இதுகுறித்து மருமகள் தனது கணவர் மற்றும் அவரது அண்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறினார்.
அவர்கள் கிருஷ்ணய்யரை சரமாரியாக தாக்கினர். உயிருக்கு பயந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணவபாடு என்ற இடத்திற்கு கிருஷ்ணய்யர் நடந்தே சென்றார். தனது பாதுகாப்பிற்காக, அங்கு உள்ள பஸ் நிலையத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்தார்.
மறுநாள் காலை கிருஷ்ணய்யர் மணவபாடு போலீஸ் நிலையதிற்கு சென்று புகார் அளித்தார். தனது நிலத்தை விற்று பெற்ற ரூ.3 லட்சத்தைப் பயன்படுத்தி அவரை பார்த்துக் கொள்வதாக கூறிய மகன்கள், தற்போது தனது தேவைகளைப் புறக்கணித்து தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
