உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் தில்லியா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களாக நிலவிவந்த சொத்துத் தகராறு, குடும்பத்துக்குள் பெரும் சண்டையாக மாறி, பீதி அளிக்கும் படி மூவரின் உயிரை பறித்துள்ளது.
காவல்துறையினரின் தொடக்க தகவலின்படி, சந்தேக நபர் தன்னுடைய தந்தை, தாய் மற்றும் சகோதரியிடம் கோபம் கொண்ட நிலையில் கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளார். தாக்குதலுக்குள்ளான மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்கக்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலவிய குடும்பச் சொத்துக் கலவரமே இந்தக் கொடூரத்தின் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கிராமம் முழுவதும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
