ஹைதராபாத் போடுப்பல் கிழக்கு பாலாஜி மலைப் பகுதியில் நடந்த  கொடூரமான கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் ரெட்டி (வயது 25), தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொன்றுள்ளார். சிறுவயது அண்டை வீட்டார்களாக இருந்த இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 25 நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக ஹைதராபாத் நகரில் குடிபெயர்ந்து உப்பலில் வசித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், மனைவி சுவாதியை மகேந்தர் ரெட்டி கொலை செய்த பின் உடலை துண்டித்தது தெரியவந்தது. கைகள், கால்கள், தலையை பிரித்து, அவற்றை பைகளில்  சுற்றி பிரதாப் சிங்காரம் அருகே உள்ள மூசி ஆற்றில் கொட்டியுள்ளார். குற்றவாளியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விரைவாகச் செயல்பட்டு மகேந்தர் ரெட்டியை கைது செய்தனர்.

மீதமுள்ள உடல் பாகங்களை மீட்க பேரிடர் மீட்புப் படை (DRF) மற்றும் தடயவியல் குழுக்கள் மூசி ஆற்றங்கரையில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கர்ப்பிணி பெண்ணின் உயிரைப் பலிகொண்ட இந்த சம்பவம் ஹைதராபாத் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.