ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனக்கு நேர்ந்த அசாதாரண அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு பிளாஸ்க்கில் இருந்த சுடு தண்ணீரை எடுக்க, அதன் மூடியை திறக்க முயற்சித்த போது பிளாஸ்க் வெடித்துள்ளது. இதில் மூடி அவரது நெற்றியில் பட்டு காயம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இது பிளாஸ்க் தயாரித்த நிறுவனத்தின் தவறு என்று குற்றம் சாட்டிய அவர், இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக குக்கர், சிலிண்டர் வெடிப்பது போன்றவை நடந்தாலும், பிளாஸ்க் வெடிப்பது அரிதான ஒன்று. இந்த சம்பவம் மூலம், சின்னச் சின்ன விஷயங்களில் கூட ஆபத்து ஏற்படலாம் என்பதை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.