மியான்மரை சேர்ந்த பணிப்பெண்ணான Zin Mar Nwe ஜனவரி மாதம் 2018 ஆம் வருடம் தனது 17 வயதில் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள ஏஜென்ட் மூலமாக வீடுகளில் வேலை பார்த்து வந்தவர் மே மாதம் 2018 ஆம் வருடம் மூன்றாவதாக ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அங்கே அவர் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தனக்கான வேலைகளை சரியாக செய்து வந்தார். எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த சமயத்தில் முதலாளியின் மாமியார் இந்தியாவிலிருந்து ஒரு மாத காலம் அங்கு தங்குவதற்காக வந்தார். ஆனால் பணிப்பெண்ணுக்கும் வயதான மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி பணிப்பெண்ணும் இந்திய மாமியாரும்  மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பணிப்பெண் கை தவறி ஒரு பொருளை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்திய மாமியார் பணிப்பெண்ணை கடுமையாக திட்டியதோடு மீண்டும் ஏஜென்டிடம் அனுப்பப் போவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பணிப்பெண் வயதான மாமியாரை 26 முறை சராமாறியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பணிப்பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.