நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் மார்ச் 2026-ல் நடைபெற்ற ‘அலுவே-டோ’ என்ற திருவிழாவில், பெண்கள் வீதிகளில் துரத்தப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் உலகத்தையே உலுக்கியுள்ளது.
கருவுறுதல் மற்றும் செழிப்பிற்காகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், பொதுமக்களுக்கு முன்பாகவே பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் ஈடுபட்டிருப்பதும் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் என்றும், காயமடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நைஜீரியப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஒரு உள்ளூர் சமூகத் தலைவர் மற்றும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பொது இடத்தில் இது போன்ற வன்முறைகள் நடப்பது, அந்தச் சமூகம் பெண்களின் பாதுகாப்பை எவ்வளவு அலட்சியமாகப் பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ள நிலையில், இது போன்ற கலாச்சார நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
