அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமியின் தந்தை பூங்காவன கவுண்டர் (103) வயது முதிர்வால் காலமானார். அவருடைய மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தந்தையை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில் தந்தையை இழந்து தவிக்கும் கேபி முனுசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக இபிஎஸ் கூறியுள்ளார்.