தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்  நிறைவு பெற்றன. இதில் முதல் முறையாக பதக்க பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை தமிழ்நாடு வென்றுள்ளது.

கடந்த முறை 8வது இடத்திலிருந்த தமிழ்நாடு அணி இந்த முறை 2வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது ஹரியானா அணி.

மேலும் டெல்லி மொத்தம் 55 பதக்கங்களுடன் 4வது இடத்திலும், ராஜஸ்தான் 47 பதக்கங்களுடன் 5வது இடத்திலும் தெலுங்கானா 24 பதக்கங்களுடன் 6வது இடத்திலும் உள்ளது.