கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், பேருந்தில் பயணம் செய்தபோது பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, அப்பெண் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாகி, தீபக் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவையே உலுக்கிய நிலையில், தீபக் நிரபராதி என்றும், சமூக வலைதள விசாரணை காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்றும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி கடந்த ஜனவரி 21-ஆம் தேதி அந்தப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 21 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், கோழிக்கோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (பிப். 11) அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
