அருண் மாதேஸ்வரன் இயக்கி, தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியானது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். வசூல் வேட்டையிலும் தவறவில்லை. அந்தத் திரைப்படம் தான் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவலில் இருந்து திருடி எடுக்கப்பட்டதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தின் ‘புக் பேலஸ்’ பதிப்பக உரிமையாளரான வேடியப்பன் முனுசாமியும் தனது முகநூலில் இதனை தெரிவித்துள்ளார். ராஜமௌலியும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் சில காட்சிகள் என்னுடைய நாவலில் இருந்து பயன்படுத்தி உள்ளார் என்றும் கூறினார்.