நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகத்தின் கீழியங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 13,404 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத உதவி ஆணையர், முதல்வர் மற்றும் முதன்மை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உதவி ஆணையர், முதல்வர் மற்றும் முதன்மை ஆசிரியர் பணி நேர்காணலுக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்ட தேர்வர்களுக்கு பிரிவு வாரியான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது