பிரசித்தி பெற்ற மலைப்பாதையில் ஏறிச் சென்ற 44 வயதான கைரோ ரோச்சா அகுயார் அராபல் (Caio Rocha Aguiar Arrabal) என்ற நபர், பாறையின் உச்சியில் நின்று புகைப்படம் (Photo) எடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக 500 அடி (சுமார் 152 மீட்டர்) உயரத்திலிருந்து தலைகீழாகக் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய புயலையும் அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ‘பெட்ரா டோ மக்காகோ’ (Pedra do Macaco) என்ற ஆபத்தான மலை உச்சிப் பாறையில் நின்றுகொண்டு கைரோ ரோச்சா புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து முடித்ததும், அங்கிருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது அவருடன் வந்த சக பயணி ஒருவர் இந்த ஒட்டுமொத்தக் காட்சியையும் தனது கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டே, “பார்த்துப் பத்திரமாக இறங்கு” என்று விடுத்த எச்சரிக்கை நொடிகளிலேயே, நிலைதடுமாறி கைரோ ரோச்சா 500 அடி ஆழப் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார்;
🛑CONTEÚDO SENSÍVEL!
Acidente com mort€ em um dos pontos turísticos mais famosos do Brasil.
Um homem se desequilibrou e despencou de uma pedra de mais de 150 metros de altura.
Caio Rocha participava de uma trilha com outras pessoas quando resolveu andar por uma área de… pic.twitter.com/35KB07D8c4
— Paula Zanelli (@paulazanelli) June 29, 2026
அவர் கீழே விழும் போது அந்த நண்பர் போட்ட மரணக் கூச்சலும் அந்த வீடியோவில் அப்படியே பதிவாகியுள்ளது. முறையான உரிமம் (License) இல்லாத போதிலும் அவர் ஒரு குழுவுக்கு வழிகாட்டியாக (Trail guide) செயல்பட்டு வந்ததாகவும், பாறையிலிருந்து கீழே இறங்கும் போது மிகவும் செங்குத்தான மற்றும் தவறான பக்கத்தைத் தேர்ந்தெடுத்துப் காலை வைத்ததால் தான் இந்த விபரீதம் நடந்துள்ளது என்றும் முதற்கட்ட போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான மலைப்பாங்கான பகுதி என்பதால், மாரிகா சிவில் டிஃபென்ஸ் மற்றும் உள்ளூர் தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் மெகா போராட்டம் நடத்தி, கயிறுகள் மற்றும் ஹெலிகாப்டர் (Helicopter) உதவியுடன் அவரது உடலை மீட்டெடுத்துள்ளனர்; ஆனால் அவர் விழுந்த இடத்திலேயே கடுமையான அதிர்ச்சிக் காயங்களால் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக 40 நிமிடங்களில் ஏறிவிடக்கூடிய மலைப்பாதையாக இருந்தாலும், இந்த உச்சிப் பாறைப் பகுதி ஏற்கனவே பல மெகா விபத்துகள் நடந்த அச்சுறுத்தும் இடமாகும். தற்பொழுது இந்தத் துயரச் செய்தி சோசியல் மீடியா ஏரியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகி, “இன்ஸ்டாகிராம் லைக்ஸ்காக்கவும், கெத்தான போட்டோவுக்காகவும் இப்படி உயிரையே பணையம் வைக்கணுமா . ஆபத்தான இடங்கள்ல போஸ் கொடுக்குறதை எப்பதான் இந்த நெட்டிசன்கள் நிறுத்துவாங்களோ!” என்று மக்கள் மத்தியில் இணையத்தில் அள்ளிக்கொட்டும் ஆதங்க கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
