இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து குடும்பத்தாரிடம் கூறியும் அவமானம் கருதி அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை.

மன வேதனையில் இருந்த சிறுமி விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள்.