திமுகவின் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் அவர்களின் சொந்த பலத்தால் கிடைத்தது இல்லை என்றும், அது கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் மட்டுமே கிடைத்தது என்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனல் பறக்கும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். திமுகவின் ஓட்டு வங்கி பலத்தை நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கிய அவர், கூட்டணிக் கட்சிகள் மட்டும் இல்லாமல் திமுக மட்டும் தனித்துத் தேர்தலில் நின்றிருந்தால், வெறும் 10 தொகுதிகளில் கூட அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மை என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.
மேலும், தற்போது மக்கள் விரும்பும் ஒரே கட்சி தவெக மட்டும்தான் என்பதை திமுகவின் கோட்டையான கொளத்தூர் தொகுதிக்கு முதல் முதலாகத் தவெக தலைவர் விஜய் சென்றபோதே மக்கள் அங்கு திரண்டு வந்து தெளிவாக நிரூபித்துவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் ஓட்டு வங்கி பலவீனத்தை வெளிப்படையாகப் பேசி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கிளப்பியுள்ள இந்த விவகாரம், தற்போது திமுக மற்றும் தவெக வட்டாரத்தில் பெரும் அரசியல் புயலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
