அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து அண்ணாமலை, பொது மக்களுக்காக பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் ராமநாதன் வருகை, பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.