சீனாவில் சாலை ஓரம் இருக்கும் ஒரு சந்தையில் காய்கறிகள், பழங்களுக்குப் பதிலாக உயிருள்ள எலிகள் கூடை கூடையாக வைத்து விற்கப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.
தூரத்திலிருந்து பார்க்கும்போது அது ஏதோ ஒரு சாதாரண காய்கறிச் சந்தை போலத் தெரிந்தாலும், கேமரா அருகில் செல்லும்போதுதான் மக்கள் தக்காளி, வெங்காயத்தைத் தேர்ந்தெடுப்பது போல உயிருள்ள எலிகளை மிகவும் சாதாரணமாகப் பார்த்துப் பார்த்து வாங்குவது தெரியவந்துள்ளது.
சில பெண்களும் கூட இந்த எலிகளைத் தேர்வு செய்து பைகளில் போட்டுக்கொண்டு செல்கின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நாம் இங்கே உருளைக்கிழங்கு வாங்குகிறோம், அங்கே எலி வாங்குகிறார்கள்” என்றும், “இதைப் பார்த்தால் பூனையே குழம்பிவிடும்” என்றும் விதவிதமாகக் கருத்துகளைப் பகிர்ந்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
இந்த எலிகளை மக்கள் எதற்காக இவ்வளவு ஆர்வமாக வாங்குகிறார்கள் என்ற கேள்வி உலக அளவில் எழுந்துள்ள நிலையில், இதற்கான துல்லியமான காரணம் அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், சில ஆசிய நாடுகளில் எலிகளை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருப்பதாலும், இன்னும் சிலர் தங்களின் செல்லப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுப்பதற்கும் அல்லது மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் இவற்றை வாங்கியிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
चीन में प्याज की बिक्री
जैसे हमारे यहां भारत में लारियों पर गली में प्याज बेचने वाले आते हैं और महिलाएं अच्छा प्याज छाँट कर खरीदती हैं वैसे ही चाइना वाले अपना प्याज खरीद रहे हैं
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) May 15, 2026
“>
இந்தியக் கலாச்சாரத்திற்கு இது மிகவும் விசித்திரமாகத் தோன்றினாலும், ஒவ்வொரு நாட்டின் உணவுப் பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் மாறுபடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகப் பொதுவான விவாதங்கள் எழுந்துள்ளன.
