இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இத்தேர்வுகள் முடிவடைந்த பின் கோடை விடுமுறையும் வரவுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அம்மாநிலத்தில் பிப்.15-ம் தேதி முதல் மாநில தொடக்க ஆசிரியர் சங்கத்தின் மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் அதாவது பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து பிப்,.18 (சனிக்கிழமை) மஹா சிவராத்திரி மற்றும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகாராஷ்டிரா மாநில பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வர உள்ளது. இந்த விடுமுறை தொடர்பான அறிவிப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.