நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஒன்றாகிய ரயில் போக்குவரத்தில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வேயானது ரத்லாம் கோட்டத்தின் கர்ச்சா-பர்லாய் நிலையங்களுக்கு இடையில் உள்ள இரட்டிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் வரும் 17 ஆம் தேதி அன்று கொச்சுவேலியிலிருந்து 11:10 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-இந்தூர் ஜேஎன் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்துசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தூரில் இருந்து வரும் 21 ஆம் தேதியன்று 21:40 மணிக்கு புறப்படும் இந்தூர்-கொச்சுவேலி வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்துசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு கொச்சுவேலியிலிருந்து வரும் 18 ஆம் தேதியன்று காலை 06:35 மணிக்கு கொச்சுவேலி-இந்தூர் வாராந்திர அதிவிரைவு விரைவு ரயில் புறப்பட்டு, உஜ்ஜைன், பதேஹாபாத் சந்திரவதி கஞ்ச், இந்தூர் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் இந்தூரிலிருந்து வரும் பிப்,.20 அன்று இந்தூர்-கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் 16:45 மணிக்குப் புறப்பட்டு இந்தூர், பதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் வழியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அஜ்மீரில் இருந்து அஜ்மீர்-ராமேஸ்வரம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பிப்,.18 அன்று 20:20 மணிக்குப் புறப்பட்டு ரத்லம், ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச், உஜ்ஜைன் வழியாக இயக்கப்படுமென அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.