BBC ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று வருமான வரி ஆய்வை மேற்கொண்டனர். BBC நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியப்பிரிவு குறித்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது.

BBC அலுவலகங்கள் மீதான ஐடி ரெய்டு விவகாரத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே வார்த்தை போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஆவணப்படத்துக்கு தடை, தற்போது ஐடி ரெய்டு. இது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இதற்கு பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி BBC-க்கு தடை விதித்ததை காங்கிரஸ் நினைவில்கொள்ள வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர்.