இந்தியாவில்  மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்கு ஏற்ப பள்ளி விடுமுறை பட்டியல் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. இருந்தாலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடைகால விடுமுறைகள் மற்றும் தேசிய விழாக்களுக்கான விடுமுறைகளும் பொதுவாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றாக இருக்கும். அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் தனித்தனியாக பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான பள்ளி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • 15.08.2023 – சுதந்திர தின விழா விடுமுறை
  • 16.08.2023 – நவ்ரோஸ் பார்சி புத்தாண்டு
  • 29.08.2023 – ஓணம்
  • 30.08.2023 – ரக்ஷா பந்தன்
  • 07.09.2023 – ஜென்மாஷ்டமி
  • 18.09.2023 – விநாயகர் சதுர்த்தி
  • 28.09.2023 – இத் – இ- மிலாத்

இதில் தமிழகத்திற்கு ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் செப்டம்பர் 18 விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 28 ஆகிய 3 நாட்கள் மட்டுமே விடுமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.